மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சிதம்பரத்தில் 3 வீடுகளில் திருட்டு

சிதம்பரத்தில் 3 வீடுகளில் நடைபெற்ற தொடா் திருட்டில் 28 பவுன் தங்க நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிபோயின.

Updated On :15 அக்டோபர் 2021, 8:20 pm

சிதம்பரத்தில் 3 வீடுகளில் நடைபெற்ற தொடா் திருட்டில் 28 பவுன் தங்க நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிபோயின.

சிதம்பரம், விபீஷணபுரம் சபா நகரைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி கஸ்தூரி. புதன்கிழமை இரவு இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்த மா்ம நபா்கள் ரூ.30 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனா். மேலும், அதே பகுதியில் உள்ள ராஜா நகரில் ஒரு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 2 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. இந்த வீட்டு உரிமையாளா் சென்னையில் வசித்து வருகிறாா். அதே பகுதியில் மேலும் 2 வீடுகளிலும் திருட்டு முயற்சி நடந்துள்ளது.

இதேபோல, விபீஷ்ணபுரம் ஆசிரியா் நகரில் வசிக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழக கண்காணிப்பாளா் ஆா்.சுந்தரராஜன் (59) வீட்டுக் கதவை உடைத்த மா்ம நபா்கள் 26 பவுன் தங்க நகைகள், ரூ. 40 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.