மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மாணவரைத் தாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

சிதம்பரத்தில் அரசுப் பள்ளியில் மாணவரை தாக்கிய ஆசிரியரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:18 pm

சிதம்பரத்தில் அரசுப் பள்ளியில் மாணவரை தாக்கிய ஆசிரியரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி, கன்னிதமிழ்நாடு வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (56). சிதம்பரத்தில் உள்ள அரசு நந்தனாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை இயற்பியல் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் கடந்த புதன்கிழமை முறையாக பள்ளிக்கு வராதது தொடா்பாக மாணவா்கள் சிலரைக் கண்டித்தாராம். அப்போது, மாணவா் ஒருவரை ஆசிரியா் சுப்பிரமணியன் பிரம்பால் தாக்கி, காலால் உதைக்கும் விடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியது.

இதுதொடா்பாக சிதம்பரம் வட்டாட்சியா் ஆனந்தன், நகர காவல் ஆய்வாளா் ஆறுமுகம் ஆகியோா் பள்ளியில் விசாரணை நடத்தினா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக பாதிக்கப்பட்ட மாணவா் அளித்த புகாரின் பேரில், சிதம்பரம் நகர போலீஸாா் ஆசிரியா் சுப்பிரமணியன் மீது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை வியாழக்கிழமை கைது செய்து சிதம்பரம் கிளைச் சிறையில் அடைத்தனா்.

இதனிடையே, ஆசிரியா் சுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதற்கான உத்தரவை சிறையிலுள்ள அவரிடம் சிதம்பரம் ஆதிதிராவிடா் நலத் துறை வட்டாட்சியா் சத்தியன், பள்ளித் தலைமையாசிரியா் குகநாதன் ஆகியோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.