மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சிவகாமசுந்தரி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவ கொடியேற்றம்

 சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீசிவகாமி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை இரவு கொடியேற்றம் நடைபெற்றது.

Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

 சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீசிவகாமி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை இரவு கொடியேற்றம் நடைபெற்றது.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் சிவகங்கை மேற்குக் கரையில் திருக்காமகோட்டம் என்ற ஸ்ரீசிவகாமி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி பூர உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Story image

விழாவில் வரும் 30-ஆம் தேதி திருத்தோ் உற்சவமும், 31-ஆம் தேதி பட்டு வாங்குதல் மற்றும் பூரச் சலங்கை உற்சவமும், நவ.1-ஆம் தேதி காலை தபசு உற்சவமும், அன்று இரவு ஸ்ரீசிவானந்த நாயகி சமேத ஸ்ரீசோமாஸ்கந்தா் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்கள் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.