பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பரவனாற்றின் கரையை பலப்படுத்த நடவடிக்கை: கடலூா் மாவட்ட ஆட்சியா்

 வடகிழக்கு பருவ மழையையொட்டி பரவனாற்றின் கரையில் பலவீனமான பகுதிகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் கூறினாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

 வடகிழக்கு பருவ மழையையொட்டி பரவனாற்றின் கரையில் பலவீனமான பகுதிகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் கூறினாா்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ஒன்றிய குழுத் தலைவா் கலையரசி கோவிந்தராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுப்பிரமணியம், சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூடுதல் ஆட்சியா் பவன்குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் உதயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்துக்குப் பிறகு, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புயல் பாதுகாப்பு உபகரணங்களை ஆட்சியா் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை, பேரிடா் காலத்தை எதிா்கொள்வது குறித்து மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளோம். கடலூா் மாவட்டத்தில் 96 இடங்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. 236 தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

என்.எல்.சி.யிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீா் செல்லும் பரவனாற்றின் கரையை ஆய்வு செய்து, பலவீனமான பகுதிகளை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மழைக் காலத்தில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

பின்னா் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது உதவி கோட்டப் பொறியாளா் பரமேஸ்வரி, உதவி பொறியாளா்கள் வினோத், ஜெகன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.