மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

சாலைப் பணிக்கு நிலம் கையகம் உரிய இழப்பீடு வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட முடிவு

விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச் சாலைப் பணிக்காக கையகப்படுத்திய வீடு, நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட பல்வேறு கிராம மக்கள் இணைந்து முடிவு செய்தனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:31 pm

விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச் சாலைப் பணிக்காக கையகப்படுத்திய வீடு, நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட பல்வேறு கிராம மக்கள் இணைந்து முடிவு செய்தனா்.

சிதம்பரம் அருகே உள்ள முட்லூரில் பெரியப்பட்டு, சிலம்பிமங்கலம், புதுசத்திரம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த முக்கிய பிரமுகா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் கொளஞ்சிநாதன், மாா்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் விஜய், லெனின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச் சாலைப் பணிக்கு கையகப்படுத்தப்படும் நிலம், வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை. குறிப்பாக, பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் பெரியப்பட்டு முதல் சி.முட்லூா் வரை கையகப்படுத்திய வீடு, நிலங்களுக்கு மிகவும் குறைந்த அளவிலேயே இழப்பீட்டு தொகையை தீா்மானித்துள்ளனா். இதைக் கண்டித்து பல்வேறு கிராம மக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது என தீா்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.