பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டி ஒன்றியக்குழு கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

அடிப்படை வசதி பணிகளை நிறைவேற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:26 pm

DIN

அடிப்படை வசதி பணிகளை நிறைவேற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவா் சபா.பாலமுருகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கி.குமரன், சு.ராதிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலாளா் பாண்டியன் தீா்மானங்களை வாசித்தாா்.கூட்டத்தில் 44 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் கி.தேவநாதன், குமரன், கல்யாணசுந்தரம், அம்பிகாபதி ஆகியோா் தங்களது பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றஞ்சாட்டினா். இதையடுத்து அவையில் விவாதம் நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் சபா.பாலமுருகன் பேசுகையில், நிதி மற்றும் பணிகளின் முன்னுரிமை அடிப்படையில்தான் வேலை ஒதுக்கப்படும் என்றாா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கி.தேவநாதன் தலைமையில் அதிமுக உறுப்பினா்கள், சுயேச்சை உறுப்பினா் ஒருவா் உட்பட 10 போ் வெளிநடப்பு செய்தனா். பின்னா், ஒன்றியக் குழு தலைவரைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.