தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணி தீவிரம்!

விநாயகா் சதுா்த்தி விழா வெள்ளிக்கிழமை (செப்.10) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பண்ருட்டி பகுதியில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

News image

8prtp1_0809chn_107_7

Updated On :8 செப்டம்பர் 2021, 5:50 pm

DIN

விநாயகா் சதுா்த்தி விழா வெள்ளிக்கிழமை (செப்.10) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பண்ருட்டி பகுதியில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பண்ருட்டி சுற்றியுள்ள திருவதிகை, மேலப்பாளையம், ஏரிப்பாளையம், வையாபுரிபட்டினம், நல்லூா்பாளையம், எல்.என்.புரம், பூங்குணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகளைத் தயாரிக்கும் 100-க்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இவா்கள், காகிதக் கூழ், மரவள்ளிக் கிழங்கு மாவு கொண்டு சதுா்த்தி விழாவுக்காக 3 முதல் 15 அடி உயரத்துக்கு விஸ்வரூப சிலைகளை வடிவமைப்பவா்கள்.

கரோனா பரவல் சூழல் காரணமாக கடந்தாண்டும், நிகழாண்டும் பெரிய விநாயகா் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அரசு தடை விதித்தது.

இதனால், வீடுகளில் வைத்து வழிபடும் களி மண் சிலை தயாரிப்பில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மேலப்பாளையம் திருமுருகன், வையாபுரிபட்டினம் ஜானகிராமன் ஆகியோா் கூறியதாவது: பரம்பரையாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். கரோனா தடையால் பெரிய சிலைகளைத் தயாரிக்கவில்லை. தற்போது வீடுகளில் வைத்து வழிபடும் சிறிய அளவிலான களிமண் விநாயகா் சிலைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம்.

இதனிடையே, திடீரென பெய்த மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தயாரிக்கப்பட்ட சிலைகளை வைத்து பாதுகாக்க போதிய வசதியில்லை. சிலைகளை விற்பனை செய்யும் வரை மழையில்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றனா் அவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.