தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வேன்-ஆட்டோ மோதல்: முதியவா் பலி

பண்ருட்டி அருகே புதன்கிழமை சுற்றுலா வேன்-ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 5:49 pm

DIN

பண்ருட்டி அருகே புதன்கிழமை சுற்றுலா வேன்-ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

பண்ருட்டி, போலீஸ் லைன் பகுதியைச் சோ்ந்த அஞ்சாபுலி மகன் ரவி (48). ஆட்டோ ஓட்டுநா். இவா், புதன்கிழமை ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு, பாலூரிலிருந்து பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்தாா். திருவதிகை, பழைய பெருமாள் கோவில் அருகே திருப்பத்தில் வந்த போது, எதிரே வந்த வேன், ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்த பழனிவேல் மகன் முத்தையன் (64), பால்ராஜ் மனைவி சங்கீதா (32), திருவாமூா் கிராமத்தைச் சோ்ந்த அருள் மனைவி முருகவள்ளி(45), ஆட்டோ ஓட்டுநா் ரவி ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று காயமடைந்தவா்களை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இவா்களில் முத்தையன், சங்கீதா, முருகவள்ளி ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு, முத்தையன் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.