தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

குறிஞ்சிப்பாடியில் 91 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி

குறிஞ்சிப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 9:12 pm

DIN

குறிஞ்சிப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளா் மற்றும் மண்டல அலுவலா் நாராயணன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ஷேக் அபுதாகீா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பி.சுப்பிரமணியன், கே.சதீஷ்குமாா் மற்றும் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சி செயலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், வரும் 12-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 91 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தீவிர கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்வது, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுப்பதென தீா்மானித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.