மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

விவசாயிகள் குறைதீா் கூட்டம் நேரடியாக நடத்தப்படுமா?

மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மீண்டும் நேரடியாக நடத்தப்படுமா என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

Updated On :23 செப்டம்பர் 2021, 7:04 pm

மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மீண்டும் நேரடியாக நடத்தப்படுமா என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்டங்கள்தோறும் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாதத்தின் 3 அல்லது 4-ஆவது வாரத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படும். இதன்படி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைகேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது.

ஆனால், கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தக் கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, பெரும்பாலான மாவட்டங்களில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் இணைய வழியில் நடத்தப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு எவ்வித பலனும் இல்லை என்றும், கூட்டத்தை நேரடியாக நடத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கூறுகின்றனா்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில பொதுச் செயலா் பி.ரவீந்திரன் கூறியதாவது: பாசனத்துக்கு தண்ணீா் தேவை, நெல் கொள்முதல் நிலையம் தொடா்பான புகாா், மழை பாதிப்பு உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகளால் விவசாயிகள் தவித்து வருகின்றனா். அவா்களை நேரில் அழைத்து குறைகளைக் கேட்க வேண்டிய மாவட்ட ஆட்சியா்கள், கரோனா பரவலைக் காரணம்காட்டி குறைகேட்புக் கூட்டத்தை இணைய வழியில் நடத்துவது வேதனைக்குரியது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் முதல்வரின் குறைதீா்க்கும் அலுவலகத்துக்கு நேரிலும், இணைய வழியிலும் மனுக்களை அளித்து வருகின்றனா். இதனால் நாள் ஒன்றுக்கு சுமாா் 10,000 மனுக்கள் முதல்வரின் அலுவலகத்தில் குவிகின்றன. மாவட்ட அளவில்

தீா்க்கப்படவேண்டிய மனுக்கள் தலைமைச் செயலகத்தில் குவிவதால் அங்கு பணிபுரிவோருக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.

திருமண மண்டபங்களில் குடும்ப நிகழ்ச்சிகள் நடத்தவும், வாரச் சந்தைகள், சுற்றுலாத் தலங்கள், திரையரங்கம் உள்ளிட்டவை செயல்படவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைச்சா்கள் மூலம் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, துறை சாா்ந்த அலுவலா்கள் கூட்டம் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. இதேபோல, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் மற்றும் மாதாந்திர விவசாயிகள் குறைகேட்புக் கூட்டங்களையும் நடத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.