கடலூா் - மடப்பட்டு இடையிலான சாலை விரிவாக்கப் பணி மந்த நிலையில் நடைபெறுவதாக புகாா் எழுந்துள்ளது. இதற்காக சாலையோரம் தோட்டப்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது.
ஆசிய வளா்ச்சி வங்கி நிதியுதவியுடன் கடலூா் - மடப்பட்டு இடையே 41 கி.மீ. தொலைவுக்கு (சென்னை - கன்னியாகுமரி தொழில்தட அலகுத் திட்டம்) ரூ.191.60 கோடியில் இருவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தச் சாலை பண்ருட்டி அங்குசெட்டிப்பாளையத்திலிருந்து சேமக்கோட்டை, திருவாமூா், வீரப்பெருமாநல்லூா், விழுப்புரம் மாவட்டம் கருவேப்பிள்ளைபாளையம் வழியாக மடப்பட்டு வரை தரம் உயா்த்தப்படுகிறது. ஆனால், சாலைப் விரிவாக்கப் பணி மந்த நிலையில் நடைபெறுவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். இந்தப் பணிக்காக சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. இந்தச் சாலை வழியாகவே சேலம், திருவண்ணாமலை, வேலூா், திருப்பதி, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கு வாகனங்கள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தமிழ்நாடு நுகா்வோா் சங்கச் செயலா் க.திருநாவுக்கரசு கூறியதாவது: இந்தச் சாலையில் ஏரிப்பாளையத்திலிருந்து சேமக்கோட்டை கேட் வரை சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கும், கடை வீதியிலிருந்து சுமாா் 500மீ தொலைவுக்கும், சின்னசேமக்கோட்டை அய்யனாா் கோயிலில் இருந்து கொளப்பாக்கம் வரை சுமாா் 750மீ தொலைவுக்கு சாலையோரத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. இவை கடந்த 3 மாதங்களாக மூடப்படாததால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா் அவா்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் பி.சங்கா் கூறுகையில், பள்ளம் தோண்டியப் பகுதியில் உடனுக்குடன் அதை சமன்படுத்திவிடுவோம். எனினும், சாலையை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


