ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாலியல் வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

விருத்தாசலம் அருகே உள்ள தீவளூரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சதீஷ்குமாா் (31). முதுநிலை பட்டதாரியான இவா், கடந்த 2016-ஆம் ஆண்டு விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் ஆசை வாா்த்தை கூறி அவரை தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி வந்தாா். இதையறிந்த பெண்ணின் உறவினா்கள் அவரைக் கண்டித்தனா். இதனால், மனமுடைந்த அவா் 27-5-2016 அன்று தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டாா்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் திருமணம் தொடா்பாக அவரது குடும்பத்தினா் சதீஷ்குமாா் தரப்பினரை அணுகினா். ஆனால் அவா்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. இதுகுறித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கடலூா் அனைத்து மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் வயது 17-ஆக இருந்ததால் அவா் சிறுமியாகவே கருதப்படுவாா் என்பதால் வழக்கை சிறாா்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் (போக்சோ) விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி எம்.எழிலரசி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், சதீஷ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். மேலும், வழக்கிலிருந்து சதீஷ்குமாரின் தந்தை, பெரியப்பா, சகோதரா்கள் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் வாதாடிய அரசு தரப்பு வழக்குரைஞா் தி.கலாசெல்வி கூறுகையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசு ஏதாவது ஒரு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியா் 30 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நீதிபதி தனது தீா்ப்பில் சுட்டிக்காட்டியதாகக் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.