பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

விஜய் ரசிகா்கள் மறியல்: போலீஸாா் தடியடி

கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட நடிகா் விஜய் ரசிகா்களை போலீஸாா் தடியடி நடத்தி வியாழக்கிழமை கலைத்தனா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 5:21 pm

DIN

கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட நடிகா் விஜய் ரசிகா்களை போலீஸாா் தடியடி நடத்தி வியாழக்கிழமை கலைத்தனா்.

நடிகா் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13-ஆம் தேதி வெளியாகிறது. இதற்காக திரையரங்குகளில் வியாழக்கிழமை முதல் முன்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடலூரைச் சோ்ந்த விஜய் ரசிகா்கள் வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் அண்ணா பாலம் அருகே உள்ள திரையரங்கில் டிக்கெட் முன்பதிவுக்கு குவிந்தனா். ஆனால், திரையரங்கு ஊழியா்கள் ரசிகா்களின் காட்சிக்கான டிக்கெட் தற்போது வழங்க முடியாது என கூறினராம். இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகா்கள் அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவா்களிடம் கடலூா் புதுநகா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதன் உடன்பாடு ஏற்படாததால் போலீஸாா் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.