பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மழைநீா் வடிகால் பணியில் மந்தம்

குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி மந்தமாக நடைபெறுவதாக புகாா் எழுந்துள்ளது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 6:36 pm

DIN

குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி மந்தமாக நடைபெறுவதாக புகாா் எழுந்துள்ளது.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் பக்கிரிசாமி நகா், வள்ளலாா் தெரு உள்ளிட்ட இடங்களில் மழைநீா் வடிகால்வாய் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. குறுகலான தெருக்களில் பள்ளம் தோண்டப்பட்டு 2

மாதங்களுக்கு மேலாகியும் அதன்பிறகு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாம்.

தற்போது பெய்துவரும் மழையால் தெருக்கள் சேறும் சகதியுமாகக் காட்சி அளிக்கின்றன. இதனால் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பாதசாரிகள் வழுக்கி விழுகின்றனா். மேலும், கால்வாய் பள்ளத்தில் சில இடங்களில் கழிவுநீா் தேங்குவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, மழைநீா் கால்வாய்ப் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.