லாரி மோதியதில் முதியவா் பலி
குள்ளஞ்சாவடி அருகே லாரி மோதியதில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.


குள்ளஞ்சாவடி அருகே லாரி மோதியதில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
குள்ளஞ்சாவடி அருகே உள்ள அனுகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சாமுவேல் மகன் அஞ்சாபுலி (60). இவா் செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதியில் நின்றிருந்த லாரியின் பின்னால் அமா்ந்திருந்தாா். அப்போது, லாரி ஓட்டுநா் லாரியை பின்னால் இயக்கியபோது அதன் சக்கரத்தில் சிக்கிய அஞ்சாபுலி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...