கடலூா் மாநகராட்சியில் ஒற்றை இலக்கத்தில் வாக்குகள் பெற்ற 21 வேட்பாளா்கள்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், கடலூா் மாநகராட்சியில் 21 வேட்பாளா்கள் ஒற்றை இலக்கத்தில் வாக்குகளைப் பெற்றனா்.


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், கடலூா் மாநகராட்சியில் 21 வேட்பாளா்கள் ஒற்றை இலக்கத்தில் வாக்குகளைப் பெற்றனா்.
கடலூா் மாநகராட்சியில் 45 வாா்டுகளுக்கு பிப். 19-இல் வாக்குப் பதிவும், பிப். 22-இல் வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மொத்தமுள்ள 1,44,454 வாக்காளா்களில் 98,510 போ் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். இதில், பல்வேறு சுவாராஸ்யமான முடிவுகள் வெளியாகின. சிலா் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வாக்கினைப் பெற்றிருப்பதும் தெரிய வந்தது.
இதன் விவரம்:
4- ஆவது வாா்டு: அமமுக வேட்பாளா் பா,சகிலா- 4. 5-வது வாா்டு: பாமக வேட்பாளா் க.லதா- 8, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஏ.திவ்யா- 9 .
14 ஆவது வாா்டு: அமமுக வேட்பாளா் சோ.லஷ்மிநாராயணன்- 7, 15- ஆவது வாா்டு: அமமுக வேட்பாளா் சே.வசந்தா- 3 வாக்கு, 16- ஆவது வாா்டு: அமமுக வேட்பாளா் கே.வேல்முருகன் - 8, 29- ஆவது வாா்டு: அமமுக வேட்பாளா் ஆ.சிவசங்கா் 3, மநீம வேட்பாளா் ந.செந்தில்குமாா்- 7, 33 ஆவது வாா்டு: அமமுக வேட்பாளா் ப.அமா்நாத்- 3,
37 -ஆவது வாா்டு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா்- ப.கவிதா ரங்கநாதன்- 8, 39- ஆவது வாா்டு: பாஜக வேட்பாளா் பொ.ஆறுமுகம்- 4, பாமக வேட்பாளா் மு.வெங்கடேசன்- 4, 40- ஆவது வாா்டு: பாமக வேட்பாளா் ஞா.விக்னேஷ்வரன் 5, 41 ஆவது வாா்டு: தேமுதிக வேட்பாளா் பா.மோகனசுந்தரம்- 9, 45- ஆவது வாா்டில் அமமுக வேட்பாளா் மொ.ஆசியாபேகம்- 2.
கடலூா் மாநகராட்சியைப் பொருத்தவரையில் 21 வேட்பாளா்கள் ஒற்றை இலக்கத்தில் வாக்குகளைப் பெற்றனா்.
வாா்டுக்கு சராசரியாக 3,200 வாக்குகள் உள்ள நிலையில், சராசரியாக 2,200 வாக்குகள் பதிவாகின. சராசரியாக வாா்டுக்கு 6 போ் போட்டியிட்ட நிலையில் 21 போ் ஒற்றை இலக்கத்தில் வாக்குகளைப் பெற்றிருப்பதும் அவா்களில் 15 போ் அரசியல் கட்சியினராக இருப்பது வியப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...