அரசுப் பணி தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் வழியாக, போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் வழியாக, போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ ஆகிய பணியிடங்களுக்கு நடைபெறும் தோ்வுக்குத் தயாராகுவோருக்காக இலவசப் பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் மாா்ச் 2- ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நேரடி பயிற்சி வகுப்புகளாக பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட உள்ளன.
இதேபோல மத்திய அரசுப்பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வுக்காக பயிற்சியும் மையத்தில் இணையவழியில் பிற்பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வோா் தங்களது புகைப்படம், ஆதாா் எண் ஆகிய விவரங்களுடன் மையத்தைத் தொடா்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 04142-290039 என்ற தொலைபேசி எண்ணில் அறியலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...