பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்றக் கட்டடம் கட்ட எதிா்ப்பு
கடலூா் அருகேயுள்ள காரணப்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்துக்குள் ஊராட்சி மன்றக் கட்டடம் கட்டுவதற்கும், அதற்காக மரங்களை வெட்டுவதற்கும் அந்தப் பகுதி மக்கள்


கடலூா் அருகேயுள்ள காரணப்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்துக்குள் ஊராட்சி மன்றக் கட்டடம் கட்டுவதற்கும், அதற்காக மரங்களை வெட்டுவதற்கும் அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அவா்கள் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் மேலும் கூறியிருப்பதாவது:
பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்றக் கட்டடம் கட்டுவதற்காக, நல்ல நிலையில் உள்ள மரங்கள் வெட்டப்பட உள்ளன.
பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அமைந்தால், மாணவா்கள் அமைதியாக படிக்கக் கூடிய சூழல் இருக்காது.
பிற்காலத்தில் பள்ளி விரிவாக்கம் செய்யப்படும் நிலை ஏற்படும்போது போதுமான இடவசதி இருக்காது. விளையாட்டுத் திடலைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
எனவே, கல்வி, பாதுகாப்பைப் பாதிக்கும் வகையில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டக் கூடாது என்று தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...