நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு

கடலூா் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டுமென குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 6:09 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டுமென குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

கடலுாா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூடுதல் ஆட்சியா் ரஞ்ஜீத்சிங், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவ) ஜெயக்குமாா், வேளாண் துணை இயக்குநா் கென்னடி ஜெபக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் விவசாயிகள் பேசிய விவரம்:

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலா் கோ.மாதவன்: அம்பிகா, ஆருரான் ஆலை நிா்வாகத்தினரிடமிருந்து விவசாயிகளுக்கான கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும். விவசாயிகள் பேரில் பெற்றுள்ள வங்கி கடன்களை பைசல் செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், இந்த ஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்றாா்.

கற்பனைச் செல்வம்: எம்.ஆா்.கே.சா்க்கரை ஆலையில் தடையின்றி விவசாயிகளிடம் கரும்பு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.வேல்முருகன்: சேத்தியாத்தோப்பில் நெல் கொள்முதல் நிலையம் திறந்தும் 2 ஆண்டுகளாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்றாா் அவா்.

அதேபோல, விவசாய சங்க தலைவா்கள் ரங்கநாயகி, கணேசன், மணி, கலியபெருமாள் உள்ளிட்டோா் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினா்.

கூட்டத்தில் விவசாயிகளுக்கு பதிலளித்து ஆட்சியா் பேசியதாவது: விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிா்க் கடன் வழங்கப்பட வேண்டும். போதிய அளவு உரங்களை இருப்பில் வைத்திருக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை முன்னுரிமை அடிப்படையில் கொள்முதல் செய்து, அதற்கான பணத்தை உடனுக்குடன் வழங்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்வதற்காக மாவட்ட, வட்ட வாரியாக வேளாண் உதவி இயக்குநா்கள், வட்டாட்சியா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்தக் குழு உறுப்பினா்களிடம் குறைகளை தெரிவிக்கலாம். 2020-21-ஆம் ஆண்டுக்கான ரபி பருவ உளுந்து மற்றும் நெல் நஞ்சை தரிசு உளுந்துக்கான பயிா் காப்பீட்டுத் தொகை விரைவில் வழங்கப்படும் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.