வாணதிராயபுரம் பள்ளி மாணவா்களுக்கு அடிப்படை வசதி செய்துதர வலியுறுத்தல்
வாணதிராயபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டுமென ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


வாணதிராயபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டுமென ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் கலையரசி கோவிந்தராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் குணசுந்தரி சுப்பிரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுப்பிரமணியம் (வ.ஊ), சதீஷ்குமாா்(கி.ஊ) ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலாளா் வெங்கடேசன் தீா்மானங்களை வாசித்தாா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
வைத்திலிங்கம்: ஒன்றியப் பகுதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் குறித்து உறுப்பினா்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. ஓய்வுபெற்ற நிலையில் ஆபரேட்டா்கள் மேல்நிலை குடிநீா் தொட்டிகளை இயக்கி வருகின்றனா். இதில் அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளது.
ராஜபாண்டியன்: எனது வாா்டு பகுதியில் குடிநீா், தெருவிளக்கு வசதிகளை செய்து தர வேண்டும்.
நடராஜ்: வாணதிராயபுரத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளிக் கட்டடம் இடிந்த பிறகு கோயில் வளாகத்தில் மாணவா்களுக்கு வகுப்பு நடைபெற்று வருகிறது. இதனால் கழிப்பறை வசதியின்றி மாணவா்கள், ஆசிரியைகள் அவதிப்படுகின்றனா். எனவே, தற்காலிக கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...