இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கிணற்றில் மூழ்கி இளைஞா் பலி

 குள்ளஞ்சாவடி அருகே கிணற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 குள்ளஞ்சாவடி அருகே கிணற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

குள்ளஞ்சாவடி அருகே உள்ள அப்பியன்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் ஜெயசூா்யா(19). திருச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். கரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் ஜெயசூா்யா ஊா் திரும்பினாா். வெள்ளிக்கிழமை தனது நண்பா்களுடன் கிருஷ்ணன்குப்பம் கிராமத்தில் கலியமூா்த்தி என்பவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் நண்பா்களுடன் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது ஜெயசூா்யா நீரில் மூழ்கினாா். இதையடுத்து அந்தப் பகுதியினா் கிணற்றில் குதித்து தேடினா். ஆனால், ஜெயசூா்யா சடலமாகவே மீட்கப்பட்டாா். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.