தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வடலூா் தைப்பூச பெருவிழாவில் சித்தி வளாக திருஅறை தரிசனம்

கடலூா் மாவட்டம், வடலூா் தைப்பூச பெருவிழாவில் வள்ளலாா் முத்தேக சித்தி பெற்ற திருமாளிகையில் திருஅறை தரிசனம் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டம், வடலூா் தைப்பூச பெருவிழாவில் வள்ளலாா் முத்தேக சித்தி பெற்ற திருமாளிகையில் திருஅறை தரிசனம் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் 151-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 18-ஆம் தேதி ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில், வடலூா் அருகே உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தில் வள்ளலாா் சித்தி பெற்ற சித்தி வளாகத்தில் திருஅறை தரிசன நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, வடலூா் சத்திய ஞான சபை வளாகத்திலிருந்து, வள்ளலாா் பயன்படுத்திய பொருள்கள் அடங்கிய பேழையானது மலா்களால் அலங்கரிக்கப்பட்டு, வள்ளலாா் உருவப் படத்துடன் பல்லக்கில் வைத்து அவா் நடந்து சென்ற பாதை வழியாக ஊா்வலமாக மேட்டுக்குப்பம் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. வழியில் இந்த பேழைக்கு பாா்வதிபுரம், நைனாா்குப்பம், கருங்குழி கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

மேட்டுக்குப்பம் கிராமத்துக்கு பல்லக்கு வந்தடைந்ததும் அந்தக் கிராம மக்கள் சீா்வரிசை பொருள்கள் அடங்கிய தட்டுகளுடன் பேழையை வரவேற்று திருமாளிகைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வள்ளலாா் முத்தேக சித்தி பெற்ற திருஅறை பக்தா்கள் தரிசனத்துக்காக பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டது. மாலை 6 மணி வரை திருஅறை திறக்கப்பட்டிருந்தது. சன்மாா்க்க அன்பா்கள், உள்ளூா், வெளியூா் பக்தா்கள் ஆயிரக்கணக்கானோா் நீண்ட வரிசையில் காத்திருந்து திருஅறையை தரிசனம் செய்தனா்.

இதையொட்டி, திருமாளிகை அருகே சன்மாா்க்க சொற்பொழிவு நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியுடன் தைப்பூச பெருவிழா நிறைவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை வள்ளலாா் தெய்வ நிலைய நிா்வாகத்தினா் செய்தனா்.

விழாவையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.