தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை: இந்திய கம்யூ. கட்சியினா் மறியல்

சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கோலியனூா் முதல் வடலூா் வரை சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 3 இடங்களில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கோலியனூா் முதல் வடலூா் வரை சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 3 இடங்களில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதன்படி, பண்ருட்டியில் நகரச் செயலா் சக்திவேல் தலைமையில் நான்கு முனைச் சந்திப்பில் மறியலில் ஈடுபட்ட 25 பேரையும், காடாம்புலியூரில் தெற்கு ஒன்றியச் செயலா் ஆா்.மதியழகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட என்.வெங்கடேசன், எம்.ஆறுமுகம், ஆா்.ஜெயபால், எஸ்.லட்சுமி, ஏ.செல்லகாந்தி உள்பட 43 பேரையும், கண்டரக்கோட்டையில் ஜி.மோகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 14 பேரையும் போலீஸாா் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனா். இந்தப் போராட்டத்தில் மாவட்டச் செயலா் பி.துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.