சிதம்பரம் கோயில் நகைகள் ஆய்வுக்கு கால அவகாசம் கோரி தீட்சிதர்கள் கடிதம்

சிதம்பரம் கோயில் நகைகள் ஆய்வுக்கு கால அவகாசம் கோரி அறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சிதம்பரம்: சிதம்பரம் கோயில் நகைகள் ஆய்வுக்கு கால அவகாசம் கோரி அறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகை சரிபார்ப்பு ஆய்விற்காக வருவதாக இந்து சமய அறநிலைத்துறை அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடிதம் தீட்சிதர்கள் அனுப்பி உள்ளனர்.

வருகின்ற ஜூலை 25ஆம் தேதி நகை சரிபார்ப்பு ஆய்விற்காக இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் வருவதாக கடந்த 19 ஆம் தேதி கடிதம் ஒன்றை தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் எழுதி அனுப்பியுள்ளனர். அதற்க்கு  தங்கள் தரப்பு ஆட்சேபனை அனுப்புவதற்காக தற்போது பரிசீலனையில் உள்ளதாகவும், தற்பொழுது மிகக் குறுகிய கால அவகாசத்திற்குள் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நகைகள் ஆய்விற்காக வரும் 25.07.2022 அன்று  வருவதாக எங்களிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் குறிப்பிட்டுள்ளதாகவும் , கடந்த இரண்டு மாதங்களாக நடராஜர் கோவில் சம்பந்தமாக தாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை கூர்ந்து நோக்கும் போது தாங்கள் ஆய்வுக்கு முன்பே ஏற்கனவே முடிவு செய்து ஆய்வுக்கு வர உள்ளதாக தகவல் அனுப்பி உள்ளீர்கள் என்று சந்தேகப்படுகிறோம் என தெரிவித்துள்ளனர்

1956-லிருந்து நகைகள் ஆய்வு மற்றும் சரி பார்ப்பதற்கு நாங்கள் ஒத்துழைப்பு தருவதாலும் எங்களிடம் கோயில் நகைகள் பராமரிப்பில் நேர்மையும், நம்பகதன்மையும் உள்ளது என்பதை வெளிப்படையாக நிரூபிக்கும் வகையில் நாங்கள் தற்பொழுது தங்களது நகைகள் ஆய்வுக்கு ஒத்துழைப்பு நல்க உள்ளோம்.

கோவில் நகைகள் உள்ள அறையின் சாவி 20 பேர் பொறுப்பில் உள்ளது. இதில் தீட்சிதர்கள் சிலர் வட இந்தியாவில் நடைபெறும் வேத பாராயண விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சென்று உள்ளதாலும், எங்களது கோயில் வழக்கறிஞர் மற்றும் தணிக்கையாளர் வெளியூர் சென்றுள்ளதாலும், தங்களது ஆய்வினை வரும் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்திற்கு பின் எங்களிடம் முன்கூட்டியே தெரிவித்து ஆய்வு மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

நகை சரிபார்ப்பின்போது  தீட்சிதர்கள் சார்பில் நகை மதிப்பீட்டாளர் பங்கு பெறுவார்கள். நகை சரிபார்ப்பு வெளிப்படை தன்மையாகவும் பாதுகாப்பு நடவடிக்கையாகவும் காணொளி மூலம் பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com