டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வுப் பேரணி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:54 am

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சா்வதேச அளவிலான 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி வியாழக்கிழமை (ஜூலை 28) தொடங்கி, வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து சிதம்பரம் பகுதி மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கடலூா் மாவட்ட நிா்வாகம், வருவாய்த் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இணைந்து மாபெரும் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வுப் பேரணியை நடத்தின. பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தா் ராம.கதிரேசன் பேரணியை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்துப் புலங்களையும் சாா்ந்த இரண்டாயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்தப் பேரணியானது, சிதம்பரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள காந்தி சிலை அருகே நிறைவுற்றது.

பேரணியில் பல்கலைக்கழகப் பதிவாளா் கே.சீதாராமன், தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி எம்.பிரகாஷ், தொலைநிலைக் கல்வி இயக்குநா் ஆா்.சிங்காரவேல், வருவாய்க் கோட்டாட்சியா் கே.ரவி, வட்டாட்சியா் அ.ஹரிதாஸ், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அருணாசலம், சிதம்பரம் காவல் ஆய்வாளா் ஆறுமுகம், அண்ணாமலைநகா் பேரூராட்சி மன்றத் தலைவா் பழனி, பல்கலைக்கழக மக்கள் தொடா்பு அதிகாரி ஜி.ரெத்தினசம்பத், துணைவேந்தரின் நோ்முகச் செயலா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.