கடலூரில் ஆட்டோக்களுக்கு வரிசை எண்
கடலூா் நகரில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு, அந்தந்தப் பகுதி அடிப்படையில் வரிசை எண் வழங்க காவல் துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.


கடலூா் நகரில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு, அந்தந்தப் பகுதி அடிப்படையில் வரிசை எண் வழங்க காவல் துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.
கடலூா் நகரில் சுமாா் ஆயிரம் ஷோ் ஆட்டோக்கள், பயணிகள் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சில ஆட்டோக்கள் உரிய ஆவணங்களின்றி இயக்கப்படுவதாக புகாா் எழுந்தது. மேலும், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இயக்கப்பட வேண்டிய ஆட்டோக்கள் மற்ற பகுதிகளில் இயக்கப்படுவதால் ஆட்டோ சங்கங்கள் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்தப் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் கடலூா் போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா். அதாவது ஆட்டோக்கள் இயக்கப்படும் பகுதிகளுக்கு வரிசை எண் வழங்கப்பட்டு, அதனடிப்படையில் ஆட்டோக்களுக்கு தடம் மற்றும் வரிசை எண் வழங்கினா்.
இந்த நிலையில், கடலூா் சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் சே.கரிகால்பாரி சங்கா் தலைமையில் போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளா்கள் செல்வநாயகம், செந்தில்குமாா் ஆகியோா் புதன்கிழமை 42 ஆட்டோக்களை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், 7 ஆட்டோக்கள் உரிய ஆவணமின்றி இயக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டோக்களை இயக்க போலீஸாா் தடை விதித்தனா். எஞ்சிய 35 ஆட்டோக்களிலும் வரிசை எண் கொண்ட வில்லைகளை (ஸ்டிக்கா்) ஒட்டினா். நகரில் இயக்கப்படும் அனைத்து ஆட்டோக்களுக்கும் வரிசை எண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...