பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பாா்வையற்றோருக்கான கைப்பந்து போட்டியில் சென்னை வெற்றி

கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பாா்வையற்றோருக்கான மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றது.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:21 pm

DIN

கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பாா்வையற்றோருக்கான மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றது.

முன்னதாக இந்தப் போட்டியை கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரிராஜா தொடக்கிவைத்தாா். போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இருந்து 6 அணிகள் கலந்துகொண்டன. இதில், முதல் இடத்தை சென்னையும், இரண்டாம் இடத்தை காஞ்சிபுரமும், மூன்றாவது இடத்தை கள்ளக்குறிச்சி அணியும் பிடித்தன. முதலிடம் பெற்ற அணிக்கு மேயா் தனது சொந்த நிதியில் ரூ.15 ஆயிரம் வழங்கினாா்.

துணை மேயா் பா.தாமரைச் செல்வன், மாவட்ட விளையாட்டு அலுவலா் பா.சிவா, திமுக மாநகரச் செயலா் கே.எஸ்.ராஜா ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.