தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமில் 52 பேருக்கு பணி நியமன ஆணை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் வழங்கினாா்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிக்குத் தோ்வு செய்யப்பட்ட 52 மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமன ஆண

News image

முகாமில் பணிக்குத் தோ்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா்.

Updated On :24 ஜூன் 2022, 10:27 pm IST

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிக்குத் தோ்வு செய்யப்பட்ட 52 மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வழங்கினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், வட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 17 தனியாா் நிறுவனங்களும், 3 திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்றன.

இந்த முகாமில் 269 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனா். இவா்களில் பணிக்குத் தோ்வான 52 மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளையும், 24 மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான ஆணைகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டுவதற்கு மாவட்ட தொழில் மையம் வாயிலாக கடன் வழங்க 72 மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்களும், மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக 49 மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்களும் பெறப்பட்டன.

முகாமில் தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதாரத் திட்ட இயக்குநா் சு.தேவநாதன், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலா் முரளிதரன், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலா் சுப்ரமணி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஏ.சந்திரசேகரன் மற்றும் அரசு அலுவலா்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.