சிதம்பரம்: பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் இன்று (ஜூன் 27-ம் தேதி) திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நடராஜர் கோயிலில் சித்சபைக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ஆச்சாரியார் க.ந.கனகசபாபதி தீட்சிதர் கொடியேற்றி உற்சவத்தை தொடங்கி வைத்தார். பின்னர் பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது.
உற்சவ விபரம் வருமாறு: ஜூன் 28-ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதி உலா, 29-ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதி உலா, 30-ம் தேதி வெள்ளி பூதவாகன வீதி உலா, ஜூலை 1-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதி உலா (தெருவடைச்சான்), ஜூலை 2-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா, ஜூலை 3-ம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா, ஜூலை 4-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெறுகிறது.
ஜூலை 5-ம் தேதி செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூலை 6-ம் தேதி புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.
பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. ஜூலை.7-ம் தேதி வியாழக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதர், துணை செயலாளர் கே.சேது அப்பா செல்ல தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் க.ந.கனகசபாபதி தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வார பலன்கள் - சிம்மம்

வார பலன்கள் - கடகம்

வார பலன்கள் - மிதுனம்
பெரம்பூரில் ‘விசில்’ கோலமிட்டு வாக்கு சேகரித்த விஜய்!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


