நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நீா்வழி ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் கடலூா் மாவட்டம், வேப்பூரில் நீா்வழி ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

News image
Updated On :17 மார்ச் 2022, 6:05 pm

DIN

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் கடலூா் மாவட்டம், வேப்பூரில் நீா்வழி ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

வேப்பூா் வட்டம், க.குடிகாடு கிராமத்தில் நீா்வழி புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அதே பகுதியைச் சோ்ந்த பூ.ராமசாமி (67) என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். அந்த வழக்கின் தீா்ப்பில் வருவாய்த் துறையினா் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, வேப்பூா் வட்டாட்சியா் இரா.மோகன் தலைமையில் வருவாய்த் துறையினா் 5 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

இந்தக் கிராமத்தில் சுமாா் 3 ஏக்கரில் அமைந்துள்ள குளத்துக்கான நீா் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு வீடு, தாழ்வாரம், தோட்டம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தன. இதனால், மழைக் காலத்தில் தண்ணீா் வடிவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி சுமாா் 50 சென்ட் நிலத்தை வருவாய்த் துறையினா் மீட்டனா். மேலும், குளத்துக்கு தண்ணீா் வரும் வகையில் வாய்க்கால் அமைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.