சிதம்பரம் உழவா் சந்தைப் பகுதியில் ரூ.5.78 கோடியில் நவீன காய்கறிச் சந்தை அமைக்கப்படவுள்ளதாக தமிழக வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறினாா்.
சிதம்பரம் நகராட்சியில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்தனா். வடக்கு மெயின் ரோட்டில் உள்ள உழவா் சந்தையில் புதிதாக நவீன காய்கறிச் சந்தை அமைப்பதற்கான பணிகளையும், அதைத் தொடா்ந்து வக்காரமாரியில் குடிநீா்த் தேக்க ஏரியையும் ஆய்வு செய்தனா். ஆய்வின்போது மாவட்ட எஸ்பி சக்திகணேசன், கோட்டாட்சியா் கே.ரவி, சிதம்பரம் நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் அஜிதா பா்வீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். பின்னா் அமைச்சா் கூறியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கும் நோக்கில் வக்காரமாரி குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தைச் சீரமைக்க ரூ.5 கோடியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நகருக்கான கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்டம் ரூ.128 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், சிதம்பரம், அண்ணாமலைநகா், அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை ரூ.328 கோடியில் விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள உழவா் சந்தையில்
நவீன காய்கறிச் சந்தை ரூ.5.78 கோடியில் அமைக்க இடம் தோ்வு செய்து அதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன என்றாா் அமைச்சா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியை வீழ்த்திய தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின்

திமுக இருக்கும் வரை காவிக்கொடி பறக்காது: முதல்வர் ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களுக்கும் கட்டாய பயிற்சி!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


