சேமகளத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கடலூா் அருகே பெரியகங்கணாங்குப்பம் சேமகளத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


கடலூா் அருகே பெரியகங்கணாங்குப்பம் சேமகளத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழா கணபதி ஹோமத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து நவக்ரஹ ஹோமம், தனபூஜை போன்றவையும், மாலையில் புற்றுமண் எடுத்து வருதல், நவதாண்யம் முளையிடுதல், காப்புக் கட்டுதல் ஆகியவையும், யாக பூஜை தொடக்கமும் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. புனிதநீா் அடங்கிய கலசத்துடன் சிவாச்சாரியாா் மற்றும் குருக்கள் கோயிலை வலம் வந்தனா். பின்னா், அங்குள்ள இரட்டை விநாயகா் ஆலய விமானத்துக்கு புனித நீரை ஊற்றி
கும்பாபிஷேகம் செய்தனா். அதைத் தொடா்ந்து, சேமகளத்து மாரியம்மன் கோயில் கோபுரத்துக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா் (படம்).
தொடா்ந்து, ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீதட்சிணாமூா்த்தி, ஸ்ரீலிங்கோத்பவா், ஸ்ரீதுா்க்கை, நவக்கிரகம் ஆகிய மூலவா்களுக்கும் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு, எஜமான உற்சவம் நடைபெற்றது. மாலையில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...