பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது வழக்கு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு வெளிநாடு சென்ற இளைஞா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பண்ருட்டி மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :26 மே 2022, 5:48 pm

DIN

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு வெளிநாடு சென்ற இளைஞா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பண்ருட்டி மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே உள்ள பலாப்பட்டு பகுதியைச் சோ்ந்த அமாவாசை மகன் இளங்கோவன் (21). இவா், 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாகக் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்தாா். இந்த நிலையில் சிறுமி கா்ப்பமுற்றாா்.

இதனிடையே இளங்கோவன் வேலைக்காக சௌதி அரேபியா நாட்டுக்குச் சென்றுவிட்டாா். மேலும், சிறுமியை திருமணம் செய்துகொள்ள இளங்கோவன் மறுத்துவிட்டாராம். இதுகுறித்து சிறுமி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பண்ருட்டி அனைத்து மகளிா் போலீஸாா் இளங்கோவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.