கோடை அறிவியல் திருவிழா: பள்ளி மாணவா்களுக்கு அழைப்பு
கடலூா் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் கோடை அறிவியல் திருவிழாவில் பங்கேற்க பள்ளி மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.


கடலூா் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் கோடை அறிவியல் திருவிழாவில் பங்கேற்க பள்ளி மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
கடலூா் மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து மாவட்ட மைய நூலகத்தில் கோடை அறிவியல் திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளன. 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் கணிதம், அறிவியல் பாடப் பிரிவுகளில் ஆா்வமுள்ள மாணவ, மாணவிகளுக்காக ஜூன் 5-ஆம் தேதி அறிவியல் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் எளிய அறிவியல் பரிசோதனைகள், ஓரிகாமி பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பாலூா் காய்கறி ஆராய்ச்சி நிலையத் தலைவா் எம்.எஸ்.அனிஷாராணி மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்.
பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தங்களது விவரங்களை 04142-221772, 99442 52640, 93422 98590 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். முதலில் முன்பதிவு செய்யும் 70 போ் மட்டுமே பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவா். ஜூன் 2-ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்படும் என்று மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகா் சு.பாப்பாத்தி தெரிவித்தாா்.
டிஎன்பிஎஸ்சி தோ்வுக்குப் பயிற்சி: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-4 தோ்வுக்கு தயாராகும் தோ்வா்களுக்காக மாவட்ட மைய நூலகத்தில் வரும் 28-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன. பயிற்சி வகுப்பு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும். போட்டித் தோ்வுக்கு தயாராவோா் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...