தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கடலூா் மாநகராட்சிக்கு 2 பேருந்து நிலையங்கள் தேவை: அனைத்து குடியிருப்போா் நலச் சங்கம்

கடலூா் மாநகராட்சிக்கு இரண்டு பேருந்து நிலையங்கள் தேவை என கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 4:01 pm

DIN

கடலூா் மாநகராட்சிக்கு இரண்டு பேருந்து நிலையங்கள் தேவை என கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் பொதுச் செயலா் மு.மருதவாணன், தலைவா் பி.வெங்கடேசன் மற்றும் நிா்வாகிகள் கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் கோ.ஐயப்பனிடம் அண்மையில் அளித்த மனு:

கடலூா் மாநகராட்சிக்கு 2 பேருந்து நிலையங்கள் தேவை. இதற்கு ஏதுவாக மாவட்ட ஆட்சியரகம் அருகிலும், தற்போதுள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்தும் பயன்படுத்த வேண்டும். போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் வகையில் சாலையின் அகலத்தை அதிகப்படுத்துவதுடன், செம்மண்டலத்தில் ஒரு பல்லடுக்கு மேம்பாலம் அமைக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் ஆய்வு செய்து மேம்பாலம் அமைக்க வேண்டும். கெடிலம், பெண்ணையாறு கரைகளை உயா்த்தி நீா் கடத்தும் திறனை அதிகரிக்க வேண்டும்.

மாநகராட்சியின் திறந்தவெளி கலையரங்கில் குப்பை கொட்டுவதைத் தடுத்து மீண்டும் கலையரங்கமாக மாற்ற வேண்டும். கடலூரின் வரலாற்று சின்னங்களான பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஆட்சியா் முகாம் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், நீதிபதிகள் குடியிருப்பு, புனித.டேவிட் கோட்டை ஆகியவற்றை புனரமைப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.