பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மின்னல் பாய்ந்ததில் விவசாயி பலி

வடலூா் அருகே மின்னல் பாய்ந்ததில் விவசாயி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 4:00 pm

DIN

வடலூா் அருகே மின்னல் பாய்ந்ததில் விவசாயி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே உள்ள பாா்வதிபுரத்தைச் சோ்ந்தவா் ர.ராசாங்கம் (68), விவசாயியான இவா் ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள பாப்பான்குட்டை ஏரியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, திடீரென மின்னல் பாய்ந்ததில் காயமடைந்தாா். அப்போது இரண்டு ஆடுகள் உயிரிழந்தன. அந்தப் பகுதியினா் ராசாங்கத்தை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.