கடலூர்: படகில் 10 கி.மீ. இரு கை சிலம்பாட்டம்; சிறுவர்கள் சாதனை

கடலூரில் படகில் தொடர்ந்து 10 கி.மீ. இரு கை சிலம்பாட்டம் செய்து சிறுவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கடலூர்: படகில் 10 கி.மீ. இரு கை சிலம்பாட்டம்; சிறுவர்கள் சாதனை

கடலூர்: மறைந்த முன்னாள் முதல்வர்  கலைஞரின் 99 வது பிறந்த நாள் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் 69 வது பிறந்த நாளை  முன்னிட்டு கிள்ளை பிச்சாவரம் முதல் பழையாறு வரை 2 மணி நேரத்தில்  10 கி.மீ. தொடர் இரு கை  சிலம்பாட்டம் படகில் சென்றபடி சிறுவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தாண்டவராயன் சோழகன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்-அம்சா தம்பதியினர். இவர்களுக்கு 6-ம் வகுப்பு  பயிலும்  அதியமான் (12), 4-ம் வகுப்பு பயிலும் ஆதிஸ்ரீ (9) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இவர்கள் மாவீரர் சிலம்ப கலைக்கூடத்தில்  பாரம்பரிய விளையாட்டான சிலம்ப விளையாட்டை கற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞரின் 99-வது பிறந்தநாள், முதல்வர் ஸ்டாலின் 69-வது பிறந்த நாளை  முன்னிட்டு கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் தொடங்கிய சிலம்பம் மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு வரை 10 கி.மீ தொடர்ந்து படகிள் சென்றவாரு இரு கம்பு சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்வு நடத்தினர். 

பழையாறு வந்தடைந்த சாதனை சிறுவர்களை சீர்காழி எம்.எல்.ஏ  பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி தலைவர் மூர்த்தி  ஆகியோர் வரவேற்றனர்.  முடிவில் ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் சார்பில் 2 மணி நேரத்தில் நிறைவு செய்த சாதனையை அங்கிகரித்து, சான்றிதழ், பதக்கங்களை  வழங்கி கெளரவித்தார். 

இந்த சாதனையானது இந்த வயது பிரிவில், இதுவரை  எவரும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது. சாதனை புரிந்த மாணவர்களை பழையாறு மீனவ பஞ்சாயத்தார், மீனவ கிராம மக்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com