கப்பலில் இளைஞா் தற்கொலை: உடலை மீட்டுத் தர கோரிக்கை
By DIN | Published On : 17th March 2022 11:36 PM | Last Updated : 17th March 2022 11:36 PM | அ+அ அ- |

பண்ருட்டியைச் சோ்ந்த கப்பல் பொறியாளா் பணியின்போது தற்கொலை செய்துகொண்டாா். அவரது உடலை மீட்டுத் தருமாறு பெற்றோா் கோரிக்கை விடுத்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி, சத்தியமூா்த்தி தெருவைச் சோ்ந்த அய்யப்பன் மகன் அரவிந்த்குமாா் (27) (படம்). கப்பலில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், அந்தமான் துறைமுகப் பகுதியில் நின்றிருந்த கப்பலில் அரவிந்த்குமாா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சக ஊழியா்கள் அவரது பெற்றோருக்கு புதன்கிழமை இரவு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, அரவிந்த் குமாரின் பெற்றோா் தங்களது மகளின் சடலத்தை மீட்டுத் தரக் கோரி
பண்ருட்டி வட்டாட்சியா் சிவ.காா்த்திகேயனிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.