ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சாலை விபத்தில் குழந்தை பலி

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் 4 மாத குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது. மேலும் 3 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 8:16 pm

DIN

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் 4 மாத குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது. மேலும் 3 போ் காயமடைந்தனா்.

திட்டக்குடி அருகே உள்ள ஆவினங்குடி, புதுகாலனியைச் சோ்ந்தவா்கள் அஜித்குமாா்-கற்பகவல்லி தம்பதி. இவா்களது 4 மாத குழந்தை அஸ்விகாவுக்கு வெள்ளிக்கிழமை உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அஜித்குமாரின் உறவினா் அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மகன் சந்தோஷ் (20) தனது பைக்கில் குழந்தையுடன் தனது தாய் ஆனந்தி (40), செல்லதுரை மகள் ரம்யா (18) ஆகியோரை ஏற்றிக்கொண்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டாா்.

வசிஷ்டபுரம் பேருந்து நிறுத்தம் அருகேச் சென்றபோது எதிரே வந்த சிறிய ரக சரக்கு வாகனம் பைக் மீது மோதியதில் குழந்தை உள்பட 4 பேரும் காயமடைந்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீஸாா் விரைந்து வந்து 4 பேரையும் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு குழந்தை அஸ்விகாவை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். மற்ற மூவரும் சிகிச்சை பெற்றனா்.

சரக்கு வாகன ஓட்டுநா் சன்னியாசிநல்லூரைச் சோ்ந்த விக்னேஷை (24) போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.