

கடலூர் மாவட்டம், வடலூரில் சாலையோரம் நின்றவர்கள் மீது டிப்பர் லாரி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடலூர் ரயில்வே கேட் எஸ்பிஐ ஏடிஎம் அருகே சென்னை-கும்பகோணம் சாலையோரம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் சிலர் நின்றிருந்தனர். அப்போது, பண்ருட்டி மார்க்கத்தில் இருந்து வடலூர் நோக்கி வந்த டிப்பர் லாரி அங்கு நின்றிருந்தார்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் காட்டுமன்னார்கோயில், ஞான விநாயகர் கோயில் தெருவில் வசித்து வந்த சுப்ரமணியன் மகன் பாரி(42) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த காட்டுமன்னார்கோயில் கே.சுரேஷ், இ.சுரேஷ், வடலூர் ஆபத்தஆரணபஉரம்பஆலன் மகன் கணேசன் (62) மற்றும் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் என 4 பேர் காயம் அடைந்தனர். வடலூர் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த பாரியின் உடலை மீட்டு அதே மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.