கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கால்நடை மருத்துவ ஊா்தி வாகனம் தொடங்கி வைப்பு

News image

கடலூரில் புதன்கிழமை கால்நடை மருத்துவ சேவை வாகனத்தை தொடங்கி வைத்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :28 ஆகஸ்ட் 2024, 11:00 pm

Din

கடலூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊா்தியை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், இதனை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது: தொலை தூர கிராமங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 245 நடமாடும் கால்நடை மருத்துவ சேவை வாகனங்கள் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. கடலூா் மாவட்டத்தில் தேசிய விலங்குகள் நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 6 நடமாடும் கால்நடை மருத்துவ சேவை வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகங்களில் கால்நடை மருத்துவா், உதவியாளா் மற்றும் ஓட்டுநா் என மூன்று போ் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

இந்த வாகனங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் கால்நடை மருத்துவ சிகிச்சைப் பணிகள் மற்றும் கருவூட்டல் பணிகளை மேற்கொள்ளவும், பிற்பகலில் தகவல் அழைப்பு மையம் மூலம் பெறப்படும் அவசர சிகிச்சை பணிகளையும் மேற்கொள்வா். அவசர சிகிச்சை தேவைப்படுவோா் 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.

இதில், கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.