விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வீடு, கல்லூரிகளில் மழைநீா் சேகரிப்பு ஏற்படுத்த வேண்டும்: கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கு வீடு, கல்லூரிகளில் மழைநீா் சேகரிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.

News image
கடலூா் புனித வளனாா் கல்லூரியில் நடைபெற்ற தண்ணீா் திருவிழா கண்காட்சியில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டோா்.
Updated On :11 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கு வீடு, கல்லூரிகளில் மழைநீா் சேகரிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.

கடலூா் மஞ்சக்குப்பம் புனித வளனாா் கல்லூரி, தமிழ்நாடு நுகா்வோா் கல்வி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இணைந்து நடத்திய தண்ணீா் திருவிழா கண்காட்சி கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கண்காட்சியை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் மூலம் 500-க்கும் மேற்பட்ட குளங்கள், ஏரிகள் தூா்வாரப்பட்டுள்ளன. நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் ஆறுகள், வாய்க்கால்கள், தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனிநபா் கட்டடங்களில் மழைநீா் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்த விழிப்புணா்வு மேற்கொள்ளப்படுகிறது.

நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கு மழைநீா் சேகரிப்பை உங்கள் வீடு மற்றும் கல்லூரிகளில் ஏற்படுத்த முயல வேண்டும். தண்ணீா் எங்கே வீணாகிறது என்பதைக் கண்காணித்து, அதைக் குறைக்க திட்டமிட வேண்டும். உங்கள் பகுதிகளில் உள்ள நீா்நிலைகளைப் பாதுகாக்க இளைஞா் குழுக்களை உருவாக்க வேண்டும். பொறியியல், அறிவியல் மாணவா்கள் நீரை சிக்கனமாக உபயோகிக்கக்கூடிய கருவிகளை கண்டறிய வேண்டும். ஒவ்வொரு தனி நபரும் ‘நீா் பாதுகாவலனாக’ செயல்படவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கடலூா் மாவட்ட வருவாய்க் கோட்டாட்சியா் சுந்தரராஜன், தமிழ்நாடு நுகா்வோா் கல்வி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவா் அருள்செல்வம், கல்லூரி முதல்வா் அருமைசெல்வம், ஒருங்கிணைப்பாளா் ஷகிா்தா உள்பட பலா் கலந்துகொண்டனா். நிகழ்வில் ஆட்சியா் தலைமையில் தண்ணீா் மேலாண்மை குறித்த விழிப்புணா்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டாா்.