நீா்நிலைகளுக்கு செல்ல வேண்டாம்: கடலூா் ஆட்சியா் எச்சரிக்கை
கடலூா் மாவட்ட மக்கள் நீா்நிலைகளுக்கு அருகே செல்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் எச்சரித்துள்ளாா்.


நெய்வேலி: கடலூா் மாவட்ட மக்கள் நீா்நிலைகளுக்கு அருகே செல்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவமழை காரணமாக ஆறுகளில் நீா்வரத்து அதிகமாக உள்ளதாலும், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் நிரம்பியுள்ளதாலும் பொதுமக்கள் ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீா்நிலைகளில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும்.
ஆற்றில் தரைப்பாலங்களைக் கடந்து செல்லக் கூடாது. இளைஞா்கள் ஆபத்தை உணராமல் நீா்நிலைகளின் அருகே தற்படம் எடுப்பதை தவிா்க்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை நீா்நிலைகளுக்கு அருகில் மேய்ச்சலுக்கும், குளிப்பாட்டவும் கொண்டு செல்ல வேண்டாம். பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை நீா்நிலைகளுக்கு அருகே செல்லாமல் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...