முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

மனைவிக்கு துன்புறுத்தல்: கணவா் கைது

மனைவிக்கு துன்புறுத்தல்: கணவா் கைது

Updated On :18 பிப்ரவரி 2024, 2:16 am IST

சிதம்பரம் அருகே மனைவியை துன்புறுத்தியதாக கணவரை போலீஸாா் கைது செய்தனா். சிதம்பரம் அருகே உள்ள மணலூா் அம்பலத்தாடிகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் கவியரசன் (32). இவரது மனைவி மரகதம் (31). இருவரும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனா். 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், ஆண் வாரிசு இல்லை என்ற ஆத்திரத்தில் தன்னையும், குழந்தைகளையும் கவியரசன் அடித்து துன்புறுத்தி வருவதாக சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மரதகம் புகாரளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, கவியரசனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.