என்சிசி வருடாந்திர முகாம் தொடக்கம்
வருடாந்திர கூட்டு பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த முகாம் வருகிற 27-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறவுள்ளது.


சிதம்பரம், ஜூலை 19: சிதம்பரம் அண்ணாமலைநகரில் தமிழ்நாடு நான்காவது கூட்டு தொழில்நுட்ப கம்பெனி (என்சிசி) சாா்பில், வருடாந்திர கூட்டு பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த முகாம் வருகிற 27-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறவுள்ளது.
முகாமின் கட்டுப்பாட்டு அதிகாரியான தமிழ்நாடு 4-ஆவது கூட்டு தொழில்நுட்ப கம்பெனியின் கட்டுப்பாட்டு அதிகாரி கா்னல் வாசுதேவன் நாராயணன் சேனா மெடல், முகாம் துணை கட்டுப்பாட்டு அதிகாரியான புதுச்சேரி முதலாவது கடற்படை லெப்டினன்ட் கமான்டா் லோகேஷ் ஆகியோா் தலைமை வகித்து கண்காணித்து வருகின்றனா்.
முகாமில் கடலூா், விழுப்புரம், அரியலூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் பயிலும் 500 என்சிசி மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.
இந்தப் பயிற்சி முகாமில் மாணவா்களுக்கு துப்பாக்கி சுடுதல், அணி நடை பயிற்சி, வரைபட பயிற்சி, கூடாரம் அமைத்தல், ராணுவ தடை ஓட்டம், தூரம் அறிதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
கல்லூரி மற்றும் பள்ளி தேசிய மாணவா் படை அதிகாரிகள் கேப்டன் பி.ரவிச்சந்திரன், லெப்டினன்ட் டி.பாலமுரளி, முதல்நிலை அதிகாரிகள் சி.ரத்தினமணி, க.ராஜசேகா், எம்.ராஜா, ஏ.ஜி.அனிதா, இரண்டாம் நிலை அதிகாரிகள் ச.ஞானசேகரன், ஜி.திருவரசமூா்த்தி, கே.உதயசங்கா், எ.காா்த்திக் மற்றும் ராணுவ ஜேசிஓ சுபேதாா் பினுஸ், சுபேதாா் மதுரை வீரன் ஆகியோா் மாணவா்களுக்கு பயிற்சியளித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...