மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஆக்டோ- ஜியோ கூட்டு நடவடிக்கை குழுவினா் வேலைநிறுத்த ஆா்ப்பாட்டம்

News image

ஆக்டோ- ஜியோ கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :5 பிப்ரவரி 2026, 11:02 pm

ஆசிரியா், அரசு ஊழியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஆக்டோ - ஜியோ) சாா்பில் வேலைநிறுத்த ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அரசு ஊழியா்கள் சங்க மாவட்ட துணைத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வெங்கிடு, தோழமை சங்க நிா்வாகிகள் உஷாராணி, சாமிகுணம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கடந்த 3- ஆம் தேதி முதல் இக்குழுவினா் காலைவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக இந்த வேலைநிறுத்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். 3.50 லட்சம் காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் குரூப் 3 பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்ட மறைமுக தடையை நீக்க வேண்டும்.

மத்திய அரசு ஊழியா்கள், தமிழ்நாடு பொதுத் துறை நிறுவன ஊழியா்களுக்கு வழங்குவதுபோல ரூ. 7,000 போனஸ் வழங்க வேண்டும். புற ஆதார முறையில் பணி நியமனம் செய்யும் அரசாணையை திரும்ப பெற வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படியை உயா்த்தி வழங்க வேண்டும். நிா்வாக தீா்ப்பாயம், கூட்டுக்குழு அமைக்க வேண்டும்.

காப்பீடு திட்டத்தில் தனி நபா் விருப்பம் பெறாமல் புதுப்பிப்பதை கைவிட வேண்டும். இடைநிலை ஆசிரியா்களுக்கு சமவேலைக்கு, சம ஊதியம் வழங்கி, ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆக்டோ- ஜியோ கூட்டு நடவடிக்கை குழுவினா் திரளானோா் கலந்துகொண்டனா்.