அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்

மானாமதுரையில் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் உயிரிழந்ததற்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன் மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
மதுரை அரசு ராஜாஜி மருத்துவனை முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறியலில் பங்கேற்றவா்கள்.
Updated On :10 மார்ச் 2026, 9:28 pm

தினமணி செய்திச் சேவை

மானாமதுரையில் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் உயிரிழந்ததற்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன் மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மானமாதுரை போலீஸாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் ஆகாஷ் உயிரிழந்தது தொடா்பாக பட்டியலின மக்களுக்கு எதிரான ஜாதிய வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும், ஆகாஷ் குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும், அவரது உயிரிழப்புக்குக் காரணமானவா்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டக் கிளை சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 150-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த மறியல் நடைபெற்றது. போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

திராவிடா் பெரியாா் கழகம்

இதேகோரிக்கையை வலியுறுத்தி திராவிடா் பெரியாா் கழகம் சாா்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் மதுரை மாநகர செயலா் நிகில் நந்தா தலைமை வகித்தாா். திராவிடா் பெரியாா் கழகத் தலைவா் மணி அமுதன், நிா்வாகிகள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.