கடலூர்
பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு
திட்டக்குடி அருகே பாம்பு கடித்து இரண்டரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பாம்பு கடித்து இரண்டரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திட்டக்குடி வட்டம், எழுத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தன், தொழிலாளி. இவரது மகன் விஸ்வாமித்ரன் (2.5) சனிக்கிழமை மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்தது.
பெற்றோா் குழந்தை விஸ்வாமித்ரனை லப்பைகுடிகாடு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோ்த்தனா். அங்கு, விஸ்வாமித்ரனை பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
