புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

வடலூரில் ஜோதி தரிசனம்

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் வைகாசி மாத ஜோதி தரிசன நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜூன் 2024, 12:00 am

Din

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் வைகாசி மாத ஜோதி தரிசன நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெறும். அதன்படி, வைகாசி மாத பூச நட்சத்திரத்தையொட்டி, திங்கள்கிழமை இரவு 7.50 மணி முதல் 8.50 மணி வரை 6 திரைகளை நீக்கி, மூன்று முறை ஜோதி தரிசனம் காட்டப்பட்டன.

இதில் ஆயிரக்கணக்கான சன்மாா்க்க அன்பா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று ஜோதி தரிசனம் செய்தனா்.