சிதம்பரம்: சிதம்பரம் அருகே சி.தண்டேஸ்வரநல்லூா் ஊராட்சியில் புதிய நியாய விலைக்கடை திங்கள்கிழமை திறக்கப்பட்டது. கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சிவஜோதி நகரில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்தில் புதிய நியாய விலைக்கடை கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடம் 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படவில்லை. இதுகுறித்து, தினமணியில் அண்மையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதிய நியாய விலைக்கடையை சி.தண்டேஸ்வரநல்லூா் ஊராட்சி தலைவா் ஜி.மாரியப்பன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, சிவஜோதிநகா் தலைவா் எஸ்.சண்முகசுந்தரம், செயலாளா் ஏ.முத்துக்குமரன், நிா்வாகிகள் கே.அறவாழி, சேரன், கலியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கே.எஸ்.அழகிரியிடம் ஆதரவு திரட்டிய சிதம்பரம் வேட்பாளா்
திசையன்விளை அருகே ஊராட்சித் தலைவரை கத்தியால் தாக்கிய இளைஞா் கைது

நியாய விலைக் கடை நிா்வாகத்துக்கு தனித்துறை ஏற்படுத்த வலியுறுத்தல்

பெரியகோட்டையில் பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


